பார்த்தவுடன் நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டு பின் ...காலம் செல்ல செல்ல இமயத்தின் சுமையும் தந்தாள் ..எனக்கு மட்டுமல்ல ...அவளை ஒருதலையாகக் காதலிக்கும் கூட்டமே இருந்தது அன்று ...அவர்களில் நான் சீனியர்...காதலை அவளிடம் சொல்லாமலே நமகிடையில் சண்டைகளும் நடக்கும்... ,,, சம்பளம் வாங்காமலே காவலன் போல் அவளை வீடு மட்டும் கொண்டு செல்லும் ஒரு கூட்டம் ..அதனால் அவள் அப்பனுக்கு செலவு மிச்சம்...ஆட்டோ செலவு தான்..
அவள் வருகைக்காக புதுப்பட ரிலீஸ் போல் காத்திருப்போம் . ..
...வகுப்புகளை கட் அடிக்கும் ஆசாமிகளையும் ,வகுப்புகளுக்கு ஆஜராக வைத்தாள் அவள் ..அவள் செல்லும் வகுப்புகள் ஹவுஸ் புல் ஆனது...அவளால் நன்றாகவே சம்பாதித்தார்கள் ஆசிரியர்கள் .பசங்க அவளால் படிக்கவும் ஆரம்பித்தார்கள் ....ஏன்?? வகுப்புகளில் ஆசிரியர்களிடம் ..அவள் முன்னிலையில் அவமானப்பட நாம் யாரும் விரும்பவில்லை !!!!!!!!!!!! ...ஹ்ம்ம் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று அவளை impress செய்ய..புத்தகத்தை தூக்காத பசங்களும்..இரவு பகலாக படித்தார்கள்
நெஞ்சுக்குள் ஆசையோடு நானும் அவர்களில் ஒருவன்.. .காதல்சொல்லாமலே..கடைசிவரை..அவள் பக்கத்தில் சென்று அவள் மேல் பட்டு வரும்
காற்றை சுவாசித்து மோட்சம் அடைந்தேன்,,,அன்று அதை சொல்லுவதில் கூட பெருமை..... காதலை சொல்லுவதற்கு வாழ்கையில் எதாவது சாதிக்க வேண்டும்!!!!!! ..அப்போது தான் அவள் காதலை ஏற்பாள் என்ற நம்பிக்கையில் இருந்தேன் .. ஏன் ?நம் ஒரு தலை காதல் சங்கமமும்தான்....
காலங்கள் சென்றது...யார் அவன்??அவனை சில கிழமைகளாகவே அவளோடு
பார்கிறேன்... அதிகமாகவேநெருக்கம் காட்டினான் . பொறாமையும் எரிச்சலும் வரும் ..நாதி இல்லாத எனக்கு..நாம் காதலிக்கும் பெண்ணை இன்னொருத்தனோடு பார்க்கும் பொது ஏற்படும் உணர்ச்சி ..இவ்வளவு கொடுமையானதா???? ....இதை விட கொஞ்சம் கலர் ஆகவும் உயரமாகும் நான் இருந்திருக்க கூடாதா??? என்று முதல் முதலாக கவலை பட்டேன்.. ,,,அவன் கனடாக்காரனாம் அவளை 3 வருடங்களின் பின் கல்யாணம் செய்ய போறானாம்.!!!!!!!!!!!!.இந்த உலகை முதல் முதல் அழகாக காட்டியவள் மீண்டும் ..என்னை நரக தேச இளவரசன் ஆக்கி சென்றால்..கண்களை இழந்த எனக்கு கனவுகள் மட்டும் தான் சொந்தம்..இல்லை அதன் நினைவுகள் .,,
காலங்கள் சென்றது..................................
காலங்கள் சென்றது..................................
.அவளை 5 வருடங்களாகவே நான் பார்கவில்லை ..ஆனால் நேற்று..........அவள் ..அவனோடு பார்த்தேன் ..என்னை அடையாளம் கண்டுவிடத்தை ..அவள் கண்கள் காட்டியது....நானோ ஒன்றும் தெரியாதவன்
திரும்பிகொண்டேன் ..அப்போது அவள்..".ஹே இவன் என்ன கிளாஸ்ல நல்ல சைட் அடிப்பான் தெர்யுமா ..என்று அவள் ,அவனிடம் சொன்னாள்!!!!!!..
ஹ்ம்ம்ம் நான் என்ன செய..சிரிப்பும் அழுகையும் ..முதல் முதலாக ..ஆச்சர்யம் தான் ..என் காதல் ஒரு தலை தான் ..ஆனால் அவளை நான் விரும்பியது அவளுக்கு உண்மையிலே தெரிந்திருந்தது ..அதுவே எனக்கு ஒரு ஆறுதல்., பெண்கள் அப்பாவிகள் என்று அப்பாவித்தனமாக ஏமாறுகிறோம்,நாம் அப்பாவிகள் .
குறிப்பு :::இவை யாவும் கற்பனை அல்ல
குறிப்பு :::இவை யாவும் கற்பனை அல்ல
அருமையாக செதுக்கியிருக்கிறீர்கள்....
ReplyDeleteநன்றி ..காதலை போன்றே காதல் கதைகளும் அழகானவை ..அதுவும் தமிழில்
ReplyDeleteKathalaki ponan nanba............................
ReplyDelete