Friday, January 30, 2015

வெளிநாட்டு நண்பன்

அது தூங்கா நகரம் ,ஒவ்வொரு நாளும் .ஒரே பரபப்பு .ஆனால் அங்கு தூங்காமல் இருப்பது நம்மவர்களின் கண்களும் ,கனவுகளும்தான் .நான் ரமேஷ்,  தம்பி படிப்பு ,தங்கை கல்யாணம் .அப்பா மருத்துவ செலவு ,இப்படி குடும்பத்துக்ககாக வாழ்க்கையை டாலருக்கு அடமானம்,வைத்தவர்களில் நானும் ஒருவன். இங்க என்ன போல பல ரமேஷ் இருக்காங்க !!
எங்க தியாகம் ,இங்க கடைமையாகபட்டிருக்கு .
இது தான் எங்க hostel ,சமத்துவம் வாழும் கோவில் .ராமன் ,ஆஹமது ,அன்ரூ, எல்லோரும் அண்ணன் ,தம்பியாய் ,மாமன் மச்சானாய் வாழும்கோவில் .இங்க நாங்க எல்லோரும் ஒரு குடும்பம். நறுமண தைலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் ,எங்க அறையில மணக்கிறது  vicks ,zandu balm,சிித்தாலெப்ப மூட்டுவலி தைலம் மட்டும்  தான் .


"மச்சான் .அவ ,அவ நான் வரும் வரைwait  பண்ணுவாலா?? ,என்று அழும் காதலன் இங்கதான் ,அன்றய நாளில் நடந்த எல்லாவற்றயும் மனைவியுடம் சொல்லும் கணவன் ,.இங்கதான்
  "
இங்க நான் கஸ்டப்டுரது அப்பாவுக்கு தெரியவ வேணாமஂ" எனும் மகன், ,"நம்ம கஸ்டம் தெரியாம பையனை . நல்லா படிக்கவை"
என்று சொல்லும் அப்பாவும் இங்கதான், ,இவர்களின் பாசம் ஆயிரம் காதல்கள் பார்க்காதது ,காதலிகள் தர முடியாதது ,,நண்பன் PROJECTக்குகாகா விடிய வீடிய முழிக்சு ,உதவும் நண்பன் ,உன் தங்கச்சி , படிப்புக்கு நாங்களும் உதவுகிறோம் ,என இவர்கள் பாசம் ,சினிமாக்களை தாண்டியது!!!!
 இருந்தும் என்று நாடு போய் சேருவோம் .என்ற ஆசையில் உடல் இங்கே, மனம் எங்கோ அலைப்பாய சிரிப்பில் எங்கள் சோகம் புதைக்கிறோம் அம்மா காசு கிடச்சுதா?? ,சந்தோசத்ில் சோகம் தொலைக்கிறோம் !!

 .நேற்று என் நண்பன் 'மச்சான் ,நானும் இங்க வாராண்டா .நம்ம ஊரு சம்பளம் போதாது" ,"நான் மச்சான் வேணாம்,அங்க இருக்கிற சந்தோசம் அந்த மண்,அந்த காற்று ,அந்த ஜீவ ஓட்டம் இங்க இல்லடா"!!! 

என்ன மச்சான் ,நீ போயிட்டு என்ன ,வர வேணாணு சொல்லுற ???????   

.ஹா ஹா ஹா மச்சான் சிகரேட் குடிச்சா ,உடம்புக்கு நல்லதில்ல எண்டு சிகரேட் ,குடிக்கிறவன் அறிவுரை சொல்லக்கூடாதா என்ன ??






 

Wednesday, February 26, 2014

kirrukkal கிறுக்கல்: காதலர் தினம் ..Valentines day

kirrukkal கிறுக்கல்: காதலர் தினம் ..Valentines day:  .............................. இதுதாங்க என் காலேஜ் ,வழக்கமா மனசு சரியிலைன்ன இங்க தான் வருவேன் இங்க வந்தாலே மனசு கொம்சம் லேசாயிடும்,மன...

Thursday, February 13, 2014

காதலர் தினம் ..Valentines day

 ..............................

இதுதாங்க என் காலேஜ் ,வழக்கமா மனசு சரியிலைன்ன இங்க தான் வருவேன் இங்க வந்தாலே மனசு கொம்சம் லேசாயிடும்,மனசுக்கு மேக்கப் போடாம ,வாழ்ந்த காலம் ,   , , முதல் நண்பன்,முதல் மீசை,ஹ்ம்ம் என்   முதல் காதல் , இப்படி எல்லாமேஇங்க தான் ,என்ன உண்மயா, நேசிச்ச நண்பனும் ,என்ன தீவிரமா முகத்திற்கு நேராக எதிர்த்த எதிர்யும் இங்க தான் 

 
இதில ரமேஷ்,சரண்யா ,அருண் மட்டும் ரொம்ப   special.. .பள்ளிகூடத்தில் இருந்து காலேஜ் வரையும் கடைசி வரை ஒண்ணா இருந்தொம் ...ரமேஷ்உயிர் நண்பன்     ,என் நிழல்  ..,அவன் செய்யும் சேட்டை ,,,க்ளாஸ் கலகலக்க்கும் .,எங்க Lab assistantla இருந்து principal  வரை அவன் அடிவாங்காத இடம் இல்லை..எல்லோருுக்கும் இவன் செல்ல பிள்ளை ...

அருண் என் நண்பன்,வீட்டில் இரவு தூங்காமல் கண் முழித்து படித்து விட்டு, வகுப்பில் கிரிக்கெட் மேட்ச் பார்த்து படிக்காமல் ,ஆனாலும் ரெண்டாவது ரேங்க் எடுக்கிறேன் என்று சொல்வதில் அவனுக்கு ஒரு சந்தோசம்..

சரண்யா "அழகி" என்ற தன்னடக்கம் கொண்ட தேவதை !!.எபோவுமே படிப்பு ,பாரதம் ,பேச்சு போட்டி ,எல்லாத்திலுமே ,இவ தான் நம்பர் 1 ,கடவுள் ஒரு பொண்ணுக்கு அழகு ,அறிவு செல்வம் .எல்லாம் கொடுமட்டார் ,என்று சொல்லுவாங்க but she is an exemption  ,நான் அவ விருபினது என் முழு collegeக்கும் தெரியும் ஆனா ,விடமாட்டங்க  ,அவ கிளாசுக்கு வரும்போதும் ,போகும்போதும்   என் பெயர சொல்லி சொல்லியே ரமேஷும் ,அருணும் என்ன அவ முன்னால நாரடிச்சாங்க.   அவ  அப்பப என பார்த்து சிரிப்பா,இன்ன வரைக்கும் ,,அதோட அர்த்தம் தெரியல..!!!!

.பரத நாட்டியம் Debate competition, என்று ,அவ பங்கு பெற்ற எல்லா போட்டிகளுக்கும் நானும் ,போயிருக்கன் ,வேடிக்கை ,பார்க்க>>
,அவ கார் வரும் வரை ,வகுப்புக்கு போகம வெயிட் பண்ணுவேன் ,அவள் செல் போனுக்கு போன் பண்ணி அவள் குரல் கேட்டுவிட்டு கட் பண்ணுவேன் . நான் எடுக்காத பாடத்திற்க்கும் class போயிருக்கேன்...... அவள பார்க்க!!! ,இப்படி பல கிறுக்குதனம் நானும் ,பண்ணியிருக்கன்
group discussionla கூட அவ கிட்ட பேச மாட்டன்,அவ கிட்ட போய் ,பேசினா எங்க எதாச்சும் உளறிவனொன்னு பயம், ஏனா  She is a best debater ,அவ பேச்சு திறமய பார்த்து நான் பல சமயம் மிரண்டிருக்கேன்  ,பாரதி கண்ட புதுமை பெண் அவ தா ,doubtடெ வேண்டாம் .
 
அருண் ,சரண்யா ரெண்டு பேருக்குமே எபோதும் சண்ட தாங்க .ஒரு முறை சரண்யா எல்லா படங்களிலும் first ரேங்க் .அருணோட favorite  அறிவியல் பாடத்திலும் ,வழக்கமா அருண் தான் FIRST ரேங்க் இந்த முறை,,ஹ்ம்ம் அருணுக்கு வந்த கோவம் ,இதென்ன பெரிய விஷயம் ,சந்தோஸ் மாஸ்டர் கிட்ட பர்சனல் கிளாஸ் போய் கரெக்ட் பண்ணிட்டா எண்டு அவன்   பேசிடான்,பொண்ணுங்க எவளவு தைரியமா வெளீயில காட்டிக்கொண்டாலும்  அவங்க மனசுரொம்ப பலவீன்மானது என்று அன்னைக்கு தெரிஞ்சுது  ,சரண்யா அன்னைக்கு அழுதுகிட்டே இருந்தா,என்னால அத பார்க்க முடியல்ல!!! ,மச்சான் ரமேஷ் !நான் போய் அவளுக்கு எதாச்சும் ஆறுதல்  ,,சொல்லிடு வரேன் என்றேன் .   ,ஹா! பொண்ணுக அழுத மட்டும் தாங்க முடியாதே ,அபிடியே போய் loveaiyum சொல்லு .என்றான் .இப்ப இல்ல மச்சான் feb 14 கண்டிப்பா okk , இப்பிடி தான் ,ஒவொரு வருசமும் சொலுற ,...

நான், சரண்யா  ஏன் இப்பிடி !! நீங்க அழகூடாது , அருணுக்கு பொறாமை ,உங்க மாதிரி  அவனால முடியாது என்னமா debateபண்ணுறீங்க   ,அய்யோ நீங்க போய்!!! , கண்ண துடைங்க ,அவன் வச்சு எல்லா boysayum தப்பா நினைகதீங்க!! என்று ஒட்டு மொத்த ஆண் வர்கத்துக்காக போராடினேன்..

......பிப் 14 காத்திருந்தேன்

  • பிப் 14 
    ...அன்னைக்கு எப்பிடி love propose  செயலாமென்று இரவு ,பகலா தூங்கமா நானும் ரமேஷும் discussion பண்ணினோம்    debate competitonum அன்னைக்கு தானென்று எங்களுக்கு தெரியாது,வழ்க்கம் போல ,வேடிக்கை பார்க்கக் போணோம் ... 

    இளவயது காதல். topic அப்பவே எழும்பி வந்திருக்கணும் ,சரண்யா எதிர் டீம் ,...இளவயதில் தன்னை கூட காப்பாற்ற முடியாத பருவத்தில் வரும் காதல் காதலில்லை ,சுயநலம் என்றாள். . 
    முதல் முதல் நான் பீர்ம்மை பிடிச்சசவன் ,போல் நின்றேன்.,காதல் என்ற வார்த்தை அறியாத வயசில்ருந்து இருந்து அவள் மேல் உள்ள என் பிரியம் , உணர்வு ,அவளுக்கு சுயநலம்..மச்சான் போவோம் ,என்று ..இழுத்து சென்றான் ரமேஷ்..  அந்த சம்பவம் என்ன ரொம்பவே பாதித்தது .அந்த சம்பவதுகிற்கு பினைர் நான் அவள் விட்டு  விலக ஆரம்பிச்சேன் எங்க அவள் என்னையும் சுயநலவதியா நினச்சுடுவாலோ என்ற பயம் தான்  .ஆனா எப்பிடி அன்றாலும் என் LOVEA PROOF.பண்ணுவேன் ..என்று நம்பிக்கை இருந்துச்சு .Lifela கொஞ்சம் settle  ஆனா பிறகு propose பண்ணுவோம்னு உறுதியாய் ,இருந்தேன் . மச்சான் அவ உன் தான் லவ் பணுற கொஞ்சம்  WAIT பண்ணு  ,இல்லாடி எதுக்கு உன்பார்த்து ,திரும்பி திரும்பி சிரிக்கிறாலாம்,ரமேஷ் 

    காலம்  வேகாம போச்சுது final exams ,final year    
    ஹ்ம்ம்ம் ,சரண்யா  MSC பண்ண America  போய்ட்டா!!! அவளுக்காக !!!Africa கூட போயிருப்பேன்!! ,,ஆனா ஒரு சிலசூழ்நிலைக் காரணமா ,குடும்ப பொறுப்பு என் மேல் விழ,நான் சூழ்நிலைக் கைதி  ..நம்ம அருணுக்கும் சொந்தக்காரங்க அங்கதான்....  ரமேஷும் Australiala settle ...ஆக நான் தனி யானேன் ...
    .
    இன்னையோட 8 வருஷம் ,,,,,,,.
     இன்னைக்கு வரைக்கும் .ஏன்னொட ,தொடர்பில இருக்கிறது ,ரமேஷ் மட்டும் தான் ..
    சரண்யா????ஹ்ம்ம்ம்
     ஆஆ சொல்ல மறந்துட்டேன் !!, சரண்யாயவுக்கு ,கல்யாணமாகி இன்னையொடு   4,வருஷம்க....... ..2 பசங்க,மூத்தவன் அவள மாதிரியாம் .ரெண்டாவது பொண்ணு ..வந்து,வந்து அருண் மாதிரி!???? YES they got married.

     .
     ரமேஷ் ..அருண் துரோகி என்கிறான் ..சத்தியமா எனக்கு அவன் மேல்  கொஞ்சம்  கூடகோவம் இல்ல.Everything is right in Love and War, and  he deserved her than me..அதனால கடவுளே இவங்கதான்  சரியான ஜோடினு சேர்த்து வச்சுட்டார் இல்லயா? ,  ..நடுவில நான் யாரு?? ஆனா இங்க அப்பப்ப வருவேன்,இந்த கல்லூரி ,காற்றில ,அவ சிரிப்பு மட்டும் ,இன்னும் கரயாம,கேட்டுகிட்டே.இருக்கு.அத.கேட்க,இன்னைக்கும் வந்தேன்....


                                                   




Sunday, June 5, 2011

தோனியின் வெற்றி கதை ..The success story of Mahendra singh Dhoni

இந்தியாவின் ஜ்ஹார்கந்து மாநிலத்தில் பிறந்த சாதாரண டோனி தான் இன்று இந்தியாவே கொண்டாடும் சாதனை மன்னன் .வார்த்தைகளில் அடக்கி விடமுடியாதது இவரது சாதனைகள் .அதற்கு இவர் கொடுத்த விலை உழைப்பு ,உழைப்பு மட்டுமே .இந்தியா அணிக்குள் இடம்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு  இலகுவானதல்ல 100 கோடி மக்களில் 11 பேருக்கு மட்டுமேஅது   சாத்தியம் ....விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராக  ஆக இருந்த டோனி.அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு அறவே இல்லை காரணம், கிரிக்கெட்டில் எந்த ஒரு பின்புலமும் இல்லாதவர் டோனி அது மட்டுமலாமல்அன்று அணியில் பார்த்திவ் படேல் ,தினேஷ் கார்த்திக் என ரெண்டு விக்கெட் காப்பாளர்கள் இருன்தனர்..பலதடைவைகள் தோனியின் நண்பர்கள் கிரிக்கெட்டை விட்டு விட்டு உயர் கல்வியை தொடருமாறு கேட்டுக் கொண்டனர் .ஆனால் உண்மையான திறமை இருந்தால் யாரும் யாருக்கும்  போட்டியல்ல,என்றும் தன திறமை மேல் மாறாத நம்பிக்கையோடு உழைத்த இளைஞன் டோனி   கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார் 
.அவரது சொந்த மாநிலத்தில் அவரது   ஆட்டம் பலரையும் ஆட்டம் காண வைத்தது ..அவரை அணியில் விட்டு தூக்கி தமக்கு பிடித்தவர்களை அணியில் இணைக்கலாம் என்ற ஆசையில்இருந்த எல்லாரையும் தன் திறமை என்ற ஒரே   ஆயுதத்தால் தோற்கடித்தார் ...அணியின்  தலைவராயும் ஆனார்.அணியில் இருக்கும் அங்கத்தவர்கள் பிழைகள் செய்யும்போதும் அவர்களை வசை பாடாமல்  அமைதியாய்  நிற்பது மற்ற தலைவர்களிடம் இருந்து தோனியை வேறுபடுத்தி   காட்டியது. ,இதனாலே வீரர்கள் தாங்களாகவே தம் பிழைகளை சரியும் செய்தனர் ..T20உலக கிண்ண போட்டியில்   போட்டியில் ஜோக்விந்தர் ஷர்மவை BOWLING   செய்ய கடைசி ஓவரில் அழைத்தது.,உலக கிண்ண போட்டியில் அஸ்வினுக்கு பதில் 
ஸ்ரீஷாந்தை அணிக்குள் சேர்த்தது இவை ரெண்டிலும் தன் முடிவின் மேல் நம்பிக்கை உடையவராயும் உறுதியும் கொண்டிருந்தார் .அதன் முடிவுகள் எதிர் மறையாக இருக்குமோ என்று எண்ணி பயப்பட வில்லை,  அதை சமாளிக்கவும் அவர் தயாராக இருந்தார் ...ஆட்டத்தில் சில நேரங்களில் ஏற்படும்  சிக்கல்களை   அவர் மூளைக்குள் ஏற்றினார்., மனதுக்குள் அல்ல .அதனால் தான் தெளிவான தீர்மானங்களை விரைவாகவும் சரியாகவும் ,எடுக்க முடிந்தது, ,,,
டெஸ்ட் 
கிரிக்கெட்டில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 1, ஐபிஎல் போட்டியில் 2 
முறை சாம்பியன், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன், உலக கோப்பை சாம்பியன் எ  தோனியின் வெற்றி பயணமும் தொடருகிறது .என்ன வாசகர்களே உங்களுக்குள்ளும் ஒரு தோனியை உருவாக்குங்கள் ..வெற்றி நிச்சயம்......   




Tuesday, May 31, 2011

தேவதைகள் தேசத்து இளவரசியும், நானும் -ஒரு கா(ன)தல் கதை A LOVE STORY

அது கடவுளாலும் சபிக்கப்பட்ட தேசம் .ஆனால் ..அவள் தேவதைகள் தேசத்து  இளவரசி ...நான் நரக தேசத்தின்  இளவரசன் ..பருவ வீதியின் முதல் விபத்து ..காதல்.....ஆண்கள்  பாடசாலையில் படிக்கும் நம் பசங்களுக்கு..தனியார் வகுப்புகள் ஒரு கோடை காலம்...அப்படி ஒரு வகுப்பில் தான் நான் அவளை..சந்தித்தேன்...தேவதைகளை பார்த்ததில்லை ..ஆனால்  தேவதைகள் இவளை விட அழகாக இருக்க வாய்ப்பு இல்லை ,என்று என்னை எண்ண  வைத்தவள் அவள் தான் ,,,
பார்த்தவுடன் நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டு பின் ...காலம் செல்ல செல்ல இமயத்தின் சுமையும் தந்தாள் ..எனக்கு மட்டுமல்ல ...அவளை ஒருதலையாகக்  காதலிக்கும் கூட்டமே இருந்தது அன்று ...அவர்களில் நான் சீனியர்...காதலை அவளிடம்  சொல்லாமலே நமகிடையில் சண்டைகளும் நடக்கும்... ,,, சம்பளம் வாங்காமலே காவலன் போல்  அவளை வீடு மட்டும் கொண்டு செல்லும் ஒரு கூட்டம் ..அதனால் அவள் அப்பனுக்கு செலவு மிச்சம்...ஆட்டோ செலவு தான்.. 
அவள் வருகைக்காக  புதுப்பட ரிலீஸ் போல் காத்திருப்போம் .   ..
...வகுப்புகளை கட் அடிக்கும்   ஆசாமிகளையும் ,வகுப்புகளுக்கு  ஆஜராக வைத்தாள் அவள் ..அவள் செல்லும் வகுப்புகள்   ஹவுஸ் புல் ஆனது...அவளால் நன்றாகவே சம்பாதித்தார்கள் ஆசிரியர்கள் .பசங்க அவளால் படிக்கவும் ஆரம்பித்தார்கள் ....ஏன்?? வகுப்புகளில்  ஆசிரியர்களிடம்  ..அவள் முன்னிலையில் அவமானப்பட நாம் யாரும் விரும்பவில்லை !!!!!!!!!!!! ...ஹ்ம்ம் பரீட்சையில்   அதிக புள்ளிகள் பெற்று அவளை impress  செய்ய..புத்தகத்தை தூக்காத பசங்களும்..இரவு பகலாக படித்தார்கள் 
நெஞ்சுக்குள் ஆசையோடு நானும் அவர்களில் ஒருவன்.. .காதல்சொல்லாமலே..கடைசிவரை..அவள் பக்கத்தில் சென்று அவள் மேல் பட்டு வரும் 
                    காற்றை சுவாசித்து மோட்சம் அடைந்தேன்,,,அன்று அதை சொல்லுவதில் கூட பெருமை..... காதலை சொல்லுவதற்கு வாழ்கையில்  எதாவது சாதிக்க வேண்டும்!!!!!! ..அப்போது தான் அவள் காதலை ஏற்பாள்  என்ற நம்பிக்கையில் இருந்தேன்  .. ஏன் ?நம் ஒரு தலை காதல் சங்கமமும்தான்....
 காலங்கள் சென்றது...யார் அவன்??அவனை  சில   கிழமைகளாகவே அவளோடு 
  பார்கிறேன்...  அதிகமாகவேநெருக்கம்  காட்டினான் .  பொறாமையும்  எரிச்சலும்  வரும்  ..நாதி  இல்லாத  எனக்கு..நாம் காதலிக்கும் பெண்ணை இன்னொருத்தனோடு பார்க்கும் பொது ஏற்படும் உணர்ச்சி ..இவ்வளவு  கொடுமையானதா????  ....இதை விட கொஞ்சம் கலர் ஆகவும் உயரமாகும் நான் இருந்திருக்க கூடாதா??? என்று முதல் முதலாக கவலை பட்டேன்.. ,,,அவன் கனடாக்காரனாம் அவளை 3 வருடங்களின் பின் கல்யாணம் செய்ய போறானாம்.!!!!!!!!!!!!.இந்த உலகை முதல் முதல் அழகாக  காட்டியவள்   மீண்டும் ..என்னை நரக தேச இளவரசன் ஆக்கி சென்றால்..கண்களை இழந்த எனக்கு கனவுகள் மட்டும் தான் சொந்தம்..இல்லை அதன் நினைவுகள் .,,

காலங்கள் சென்றது..................................

.அவளை 5 வருடங்களாகவே நான் பார்கவில்லை ..ஆனால் நேற்று..........அவள் ..அவனோடு பார்த்தேன் ..என்னை அடையாளம் கண்டுவிடத்தை ..அவள் கண்கள் காட்டியது....நானோ ஒன்றும் தெரியாதவன் 
 திரும்பிகொண்டேன் ..அப்போது அவள்..".ஹே இவன் என்ன கிளாஸ்ல நல்ல சைட் அடிப்பான் தெர்யுமா ..என்று அவள் ,அவனிடம் சொன்னாள்!!!!!!..

ஹ்ம்ம்ம் நான் என்ன செய..சிரிப்பும் அழுகையும் ..முதல் முதலாக ..ஆச்சர்யம் தான் ..என் காதல் ஒரு தலை தான் ..ஆனால் அவளை நான் விரும்பியது அவளுக்கு உண்மையிலே தெரிந்திருந்தது ..அதுவே எனக்கு ஒரு ஆறுதல்., பெண்கள் அப்பாவிகள் என்று அப்பாவித்தனமாக ஏமாறுகிறோம்,நாம் அப்பாவிகள் .
குறிப்பு :::இவை யாவும் கற்பனை அல்ல 








Friday, May 27, 2011

OUR GUYS NUISANCE IN FACE BOOK...OMGGG

HI GUYS...SHAPPPA...I AM TIRED WITH SOME PEOPLE IN FBOOK,EVEN U GUYS WOULD HAVE EXPERIENCE IT.ALSO....THESE GUYS HAVE MADE MANY INNOCENT PEOPLE TO DEACTIVATE THEIR  FBOOK ACCOUNT...


-SOME PEOPLE USE TO PUT STATUS EVERY HOUR,,,,I TOOK A DRESS.I HAD A SHOWER,I HAD A HAR CUT  I GOT......


-SOME PLAY (BOYS AND GIRLS) ALWAYS PUT STATUS ABOUT TRUE LOVE.....SHAPPAAA..I THINK THEY BOOK A ROOM TO THINK SOO MUCH


-IF A GUY PUT A STATUS SAYING THAT" I HAVE GRADUATED"...MANY DNT CARE ..BUT IF A GAL SAID "AM TIRED"....OMG,WHY HONEY,MA SWEET HEART,SWEET ANGEL.(WHY DNT THESE GUYS SUCIDE) !!!!!!!!


ONE DAY I TEXT ONE OF ...MA CLOSE FRND THAT WAS A URGENT...MESSAGE HA HA NO REPLY ,,,BUT AFTER SOME TIME HE HE ...HE WAS COMMENTING ON A  PICTURE OF A GAL... SAYING ..UR SO AWESOME ...THEN I SAID TO HIM..HELLO BRO,,UR AWESOME TOO...


-SOME OF OUR BOYS ALWAYS IN FBOOK ..AND FINALLY CATCH SOME GALS HERE HE HE...THEN CUMS THE RELATIONSHIP STATUS ....LETS LEAVE THAT ..THEN AFTER..2 DAYS ENGAGED. STATUS .THEN OMGGGGG AFTER A WEEK SINGLE ...AGAIN..DNT THEY FEEL SHAME...I WOULD HAVE HANG..


- ..SOME OF OUR OLD FRNDS ARE IN ONLINE ALWAYS...IF WE SAY HELLO
SOME OF THEM WILL SAY "HEY AM WRITING A SOFTWARE TO BILGATES.....
F....


I HAVE ALSO SEEN SOME PEOPLE ADDING UNKNOWN GALS AND CHATTING WITH THEM.....THEY MAKE THOSE GALS CONFUSED BY USING DIALOGUES   FROM ,HINDI OR TAMIL MOVIE..AT THE TIME WHEN THE GAL GET CONFUSED ...THEY PROPOSE "I THINK OUR RELATIONSHIP IS BETWEEN LOVE AND FRIENDSHIP...SHAPPA


WHAT EVER THESE PEOPLE DO...I AM STILL IN FBOOK COZ I HAVE MANY LOVING ONES HERE....
NOTE:THIS IS NOT TO HURT ANY ONE.....JUST FOR FUN
I TRIED MA BEST TO TRANSLATE ..MANY LIKED MA TAMIL VERSION..
WANNA SCOLD ME ...DO IT ..PRATHEEPINBA@GMAIL.COM

Wednesday, May 25, 2011

..முகப் புத்தகத்தில் (FACE BOOK)நம்ம பசங்க லொள்ளுகள்NUISANCE IN FACBOOK


shappa... முகபுத்கத்தில் நம்ம பசங்க பண்ற லொள்ளு இருக்கே..பல பேரை பைத்தியம் பிடிக்க வச்சிருக்கு ....எல்லாம் ரூம் போட்டு THINK PANNU VAANKALANU தெரியல .....அடிகடி status அப்டேட் பண்ணுவாங்க...கள்ள காதல் வசிருக்கிரவனும் ,வளும்... TRUE LOVE PATHI ... STATUS போடுவாங்க.. MUDYALA..
அது மடுமாங்கா ...டிரஸ் எடுத்தாலும் STATUS ,வாஸ்ரூம் போனாலும் STATUS..அட ...சில நேரம் இவனுங்க தொல்லையால FACE BOOK ACCOUNT DEACTIVATE பண்ணினவங்களும் இருக்காங்க
.......


பசங்க PHOTO UPLOAD எவனும் LIKE கூட பண்ண மாட்டாங்க!!!
...பொண்ணுக அதுவும்...காறி துப்புற மாத்ரி போட்டாலும் அட .பாஞ்சு விழுந்து LIKE பண்ணி., COMMENTS
பண்ணுறாங்க ...LOOKING LIKE AN ANGEL..OMG AWESOME ...SHAPPAAA
.......டேய் இவனுங்க URGENT MESSAGE பண்ணினாலும் REPLY PANURATHILAYE.... .

காஞ்சு POI எவளையாச்சும் பிடிச்சு..RELATIONSHIP WITH இன்னு போடுவாங்க..
அத விடுங்களேன் ..ஒரு ரெண்டு நாளைக்கு பிறகு..ENGAGED ஆகும்க ..அப்புறம் ஒரே வாரத்தில் மறுபடியும் SINGLE ஆகி அசிங்க படுவாங்க...

சில பேரு எப்ப பார்த்தாலும் ஆன்லைன்ல ONLINE இருப்பாங்க ..நாம ஹாய் சொன்னா போதும் ...இவனுங்க தான் BILGATESUKU சாப்ட்வேர் எழுதி KODUKIRATHA சொல்லுவானுங்க.....

சில பேரு எங்கயாச்சும் போய் போட்டோ எடுப்பாங்க ..போடோவில நாம அழகாய் இருக்கோம்னு அவனுகளே நினைச்சு கிராப் பண்ணி போடுவாங்க

......இதெல்லாம் விடுங்க ...யாரோ ஒருத்தியோட CHAT PAANI,,,,
...அவ குழம்பிற நேரத்தில்..I THINK OUR RELATONSHIP IS BETWEEN LOVE AND FRIENDSHIP என்று சொல்லி ஆப்பு வச்சவனையும் நான் பார்த்திருக்கிறன்..

இவனுங்க என்ன பண்ணினாலும் நமக்கு வேண்டப்பட்ட பலரை சந்திக்கிற ஒரே ஆறுதல் இங்கே தான் ,,,, .அந்த ஒரே காரணத்துக்காக உங்களையெல்லாம் சும்மா விடுறேன்..